கிறிஸ்மஸ் கொடுப்பனவுகள்.. இம்முறை சிறிய மாற்றங்களுடன்...!!

20 கார்த்திகை 2024 புதன் 17:02 | பார்வைகள் : 8482
கிறிஸ்மஸ் கொடுப்பனவுகள் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் வழங்கப்பட உள்ளது. சென்ற ஆண்டு வழங்கப்பட்ட சிறப்பு கொடுப்பனவுகள் இம்முறை இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2.3 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன. முந்தைய ஆண்டுகளைப் போல €152.45 யூரோக்கள் வழங்கப்பட உள்ளது. சென்ற ஆண்டு டிசம்பரில் விதிவிலக்காக 35% சதவீதம் மேலதிகமாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை அது இரத்துச் செய்யப்படுவதாக France Travail அறிவித்துள்ளது.
இம்முறை கொடுப்பனவுகளுக்காக 70 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 13 ஆம் திகதி முதல் தானியங்கி முறையில் வங்கிக்கணக்குகளில் இந்த கொடுப்பனவுகள் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025