Fresnes : தூக்கில் தொங்கிய நிலையில் - கைதியின் சடலம் மீட்பு!!

20 கார்த்திகை 2024 புதன் 14:50 | பார்வைகள் : 5200
Fresnes (Val-de-Marne) சிறைச்சாலையில் தூக்கியில் தொங்கிய நிலையில் கைதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று நவம்பர் 19, செவ்வாய்க்கிழமை இச்சடலம் சிறைச்சாலை மேற்பார்வையாளர் ஒருவரால் பார்வையிடப்பட்டு, உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டனர். எவ்வாறாயினும் குறித்த கைதியின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
26 வயதுடைய குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றத்துக்காக கடந்த ஒக்டோபரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இதே சிறைச்சாலையில் கடந்த ஒக்டோபரில் 58 வயதுடைய ஒரு கைதி தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.