Paristamil Navigation Paristamil advert login

நக்சல் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை; 4 பேருக்கு வலைவீச்சு!

நக்சல் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை; 4 பேருக்கு வலைவீச்சு!

19 கார்த்திகை 2024 செவ்வாய் 17:18 | பார்வைகள் : 3648


நக்சல் தலைவன் விக்ரம் கவுடாவை, கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே தனிப்படை போலீசார் சுட்டுக்கொன்றனர். தப்பி ஓடிய நக்சலைட்டுகள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே பாடகுண்டா என்ற இடத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சல் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: கேரளாவில் நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே நக்சலைட்டுகள் முகாமிட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர்.

கவுடா சமீப நாட்களாக சிருங்கேரி, நரசிம்மராஜபுரா, கார்கலா மற்றும் உடுப்பி பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்த பகுதிகளில் நக்சலைட் நடவடிக்கை அதிகரித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்