பரிஸ் : பலத்த காற்று... பூங்கா, கல்லறைகள், புல்வெளிப்பகுதிகள் மூடப்படுகின்றன!

19 கார்த்திகை 2024 செவ்வாய் 13:16 | பார்வைகள் : 9766
இன்று நவம்பர் 19, செவ்வாய்க்கிழமை நண்பகலின் பின்னர் பரிசில் உள்ள பூங்கா, புல்வெளிப்பகுதிகள் மற்றும் கல்லறைகள் மூடப்படுகின்றதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
பரிசில் “பலத்த காற்று” வீசலாம் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ள நிலையில், முன்னெசரிக்கை காரணமாக அவை பிற்பகல் 1 மணியில் இருந்து நாளை காலை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மழையும் கொட்டித்தீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
காற்று அதிகபட்சமாக மணிக்கு 85 கி.மீ வேகத்தில் வீசலாம் எனவும், ஒரு மணிநேரத்துக்குள் 7 தொடக்கம் 10 செ.மீ வரை மழை பதிவாகலாம் எனவும் வானிலை அவதானிப்பு மையம் எதிர்வு கூறியுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1