Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா மீது உக்ரைன் புதிய ட்ரோன் 

ரஷ்யா மீது உக்ரைன் புதிய ட்ரோன் 

22 மார்கழி 2024 ஞாயிறு 08:01 | பார்வைகள் : 5426


ரஷ்யா மீது உக்ரைன் புதிய ட்ரோன் தாக்குதல்களை  முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மூன்று ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது.

ரஷ்யா-வட கொரியா இடையிலான நட்புறவு ஒப்பந்தத்திற்கு பிறகு உக்ரைனிய பிராந்தியத்திற்குள் வட கொரிய வீரர்கள் களமிறக்கப்பட்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் மற்றும் போர் பயிற்சி வழங்கி உதவி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள உயரமான கட்டிடங்களை குறிவைத்து உக்ரைனின் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை ரஷ்யாவின் உள்ளூர் டெலிகிராம் சேனலில் பகிரப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்