Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : புயல் எச்சரிக்கை.. பூங்கா, கல்லறைகள், புல்வெளிகள் மூடப்படுகின்றன..!!

பரிஸ் : புயல் எச்சரிக்கை.. பூங்கா, கல்லறைகள், புல்வெளிகள் மூடப்படுகின்றன..!!

22 மார்கழி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 10341


இன்று பரிசில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு, புல்வெளிகள், பூங்காக்கள், கல்லறைகள் போன்றன மூடப்படுவதாக நகரசபை அறிவித்துள்ளது.

வானிலை அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்று டிசம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை பரிசில் 40 தொடக்கம் 60 கி.மீ வரை வேகமான காற்று வீசும் எனவும், இதனால் மரம் முறிவுகள் போன்ற அனர்த்தம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை காரணமாக அவை மூடப்படுகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று காரணமாக இல் து பிரான்ஸ் மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் குறைந்த பட்ச எச்சரிக்கையான ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்