Burkina Faso : ஒருவருட சிறைவாசத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட நான்கு பிரெஞ்சு நபர்கள்!!

20 மார்கழி 2024 வெள்ளி 09:00 | பார்வைகள் : 6282
மேற்கு ஆபிரிக்காவில் உள்ள Burkina Faso இல் சிறைவைக்கப்பட்டிருந்த நான்கு பிரெஞ்சு நபர்கள் ஒருவருடத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Burkina Faso இல் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு இராணுவம் சென்ற வருடம் அங்கிருந்து வெளியேறியிருந்தது. அதன் பின்னர் அங்கு உளவு வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு நான்கு பிரெஞ்சு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக எலிசே மாளிகை அறிவித்துள்ளது. அவர்களுடைய விடுதலைக்கு காரணமாக செயற்பட்ட Morocco நாட்டு அரசர் Mohammed VI இற்கு எலிசே மாளிகை நன்றி தெரிவித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025