புதிய வரவுசெலவுத்திட்டம் எப்போது.. பிரதமர் பதில்!

20 மார்கழி 2024 வெள்ளி 09:00 | பார்வைகள் : 5784
மிஷல் பார்னியேவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து, புதிய பிரதமராக பிரான்சுவா பெய்ரூ அறிவிக்கப்பட்டார். இந்த குழப்பத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றப்படாமல் போனது.. பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பெய்ரூ, இதுவரை தனது அமைச்சர்களை நியமிக்கவில்லை. இந்நிலையில் புதிய வரவுசெலவுத்திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது..
பிரதமர் பெய்ரூ, நேற்று டிசம்பர் 19 ஆம் திகதி வியாழக்கிழமை France 2 தொலைக்காட்சியில் நேர்காணலில் பங்கேற்றார். அதில் வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் பதிலளித்தார். “பெப்ரவரி - நடுப்பகுதியில்” வரவுசெலவுத்திட்டம் அறிவிக்கப்படும் என நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.
அதேவேளை, புதிய அரசாங்கம் மீது அத்துமீறிய அழுத்தங்கள் கொண்டுவரப்பட்டால், 49.3 அரசியலமைப்பை பிரயோகிக்க வேண்டி ஏற்படலாம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025