ஐரோப்பிய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.. Mayotte பயணிக்கிறார் மக்ரோன்!!

18 மார்கழி 2024 புதன் 17:56 | பார்வைகள் : 8723
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Mayotte தீவுக்கு நாளை வியாழக்கிழமை பயணிக்க உள்ளார். இதனால் நாளை இடம்பெற உள்ள ஐரோப்பிய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்களுக்கு முன்னர் Chido எனும் புயல் Mayotte தீவுக்கூட்டத்தினை சூறையாடிச் சென்றது. 23 பேர் வரை பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நிலவரத்தை நேரில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அங்கு நாளை காலை பயணிக்க உள்ளார்.
அதேவேளை, Brussels இல் இடம்பெற உள்ள ஐரோப்பிய கூட்டத்துக்கு பிரான்ஸ் சார்பாக ஜெர்மனியின் தலைவர் Olaf Scholz வழிநடுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.