யாழில் காய்ச்சல் அச்சுறுத்தல் - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

16 மார்கழி 2024 திங்கள் 09:25 | பார்வைகள் : 9069
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரையில் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் என்பன தொடர்பில் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குறித்த காய்ச்சல் காரணமாக பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025