விடாமுயற்சி படம் எப்படி இருக்கு?

11 மார்கழி 2024 புதன் 14:44 | பார்வைகள் : 4183
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமாத்துறை வட்டாரங்களில் வெளியாகியுள்ள விடாமுயற்சி படம் குறித்த விமர்சனம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்று இருக்கிறார்.
விடாமுயற்சி படத்தில் அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன பிரேக் டவுன் என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படத்துடைய டீசர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அஜித் நடித்துள்ள இன்னொரு படமான குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விடாமுயற்சி படமும் பொங்கலையொட்டி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் ரேசில் இருந்து பின்வாங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயமாக இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடையும் எனவும் சினிமாத்துறை வட்டாரங்களில் இருந்து வரும் முதற்கட்ட விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025