Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

காசா மருத்துவமனைக்குள்  இஸ்ரேலிய படையினர் வெறியாட்டம் 

காசா மருத்துவமனைக்குள்  இஸ்ரேலிய படையினர் வெறியாட்டம் 

8 மார்கழி 2024 ஞாயிறு 04:03 | பார்வைகள் : 6893


இஸ்ரேலிய படையினர் வடகாசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது  தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் நான்கு மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய படையினர் மருத்துவபணியாளர்களையும் நோயாளிகளையும் மருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட பின்னர் முக்கியமான மருத்துவ விநியோக பொருட்களை அழித்தனர் என மருத்துவமனையின் இயக்குநர் ஹ_சாம் அபு சாபியா தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை சீருடையணியாத இருவரை மருத்துவமனைக்குள் அனுப்பிய இஸ்ரேலிய படையினர் அனுப்பினர் அவர்கள் நோயாளிகளை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர், இரண்டுமணிநேர நடவடிக்கையின் போது பல மருத்துவபணியாளர்கள் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்தவர்கள் உட்பட் இளைஞர்களை கைதுசெய்தனர், என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையை இராணுவவாகனங்கள் சுற்றிவளைத்ததும், வானிலிருந்து தாக்குதல் இடம்பெற்றது  என தெரிவித்துள்ள அபுசாபியா பின்னர் இஸ்ரேலிய படையினர் பலரை கைதுசெய்து கொண்டுசென்றனர் என தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் மருத்துவமனையின் வடக்குமேற்கு திசைகளில் இருந்து தொடர்ச்சியாக விமானதாக்குதல் இடம்பெற்றது அதன் பின்னர் நேரடி தாக்குதல் இடம்பெற்றது என  குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலிய படையினர் என்னிடம் அனைத்து நோயாளிகளையும் வெளியேறு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டனர் அதன் பின்னர் அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூடச்செய்து கைதுசெய்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில மணிநேரத்தின் பின்னர் இஸ்ரேலிய படையினர் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பணியாளர்கள் வீதிகளில் பல உடல்களையும் காயம்பட்ட பலரையும் பார்த்துள்ளனர்.

அபுசய்பியா சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள படத்தில் மருத்துவமனையின் பின்புறத்தில் 17 உடல்கள் காணப்படுவதை காணமுடிந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்