இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு - மக்களுக்கு எச்சரிக்கை
7 மார்கழி 2024 சனி 13:20 | பார்வைகள் : 9954
இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 10 ஆயிரம் பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ள இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருணாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எலிக்காய்ச்சல் நோயினால் வருடத்திற்கு 120 முதல் 200 பேர் உயிரிழக்கின்றனர்.
கண் சிவத்தல், காய்ச்சல், எரிச்சல் , காயங்களில் வீக்கம் ஏற்படல் மற்றும் கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் என்பன எலிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஆகும்.
எனவே, இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியம் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan