இலங்கையில் காதலியை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற காதலன்

5 மார்கழி 2024 வியாழன் 12:40 | பார்வைகள் : 3896
கெடவல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை 23 வயதுடைய காதலியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
நேற்று மாலை ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது குறித்த நபர் பெண்ணை மரக்கட்டையால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிலீமலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், குறித்த பெண்ணும் சந்தேக நபரான ஆணும் காதல் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், வாக்குவாதம் முற்றியதையடுத்து காதலியை தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சிறிபாகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1