Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பிரான்சில் "நாளைய மாற்றம்" கவிழப்போகும் Michel Barnier அரசு.

பிரான்சில்

2 மார்கழி 2024 திங்கள் 19:18 | பார்வைகள் : 10355


Michel Barnier தலைமையிலான வலதுசாரி பெருபான்மை இல்லாத அரசு எந்த வேளையிலும் கவிழ்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

 "பிரான்சில் 5வது குடியரசில் மிகக் குறிகிய காலம் இருந்த அரசு என்பதினை Michel Barnier அரசு எழுதும்" என Nouveau Front populaire கட்சியினரும், "தாங்கள் பெரும்பான்மை இல்லாத அரசு என்பதை Michel Barnier மறந்து விட்டார்" என Rassemblement national கட்சியினரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளனர்.

சமூக நலப் பாதுகாப்புத் தொடர்பான 2025-ம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகப் பிரதமர் நாடாளுமன்ற வழிமுறைகளைப் புறக்கணித்து அதிகாரத் தோரணையில், குறுக்கு வழியில் அரசமைப்பின் 49.3 விதியைப் பயன்படுத்தியதை கடுமையாக எதிர்த்தே பிரதமர் Michel Barnier அரசை கவிழ்க்க எதிர்கட்சிகள் முடிவெடுத்து உள்ளன.

பெரும்பான்மை பலம் இல்லாத தொங்கு நாடாளுமன்றத்தில் தீவிர வலது, இடது சாரிக் கட்சிகள் ஒன்றாக இணைந்து வாக்களிக்கும் பட்சத்தில் அரசு கவிழும் அபாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் "நாடாளுமன்ற தேர்தலில் நான்காம் இடத்தில் இருந்த வலதுசாரி கட்சியான Les Républicain கட்சியினரை அழைத்து இந்த அரசை அமைத்த அரசுத்தலைவர் Emmanuel Macron  தன் தவறை ஏற்று பதவியை ராஜினாமா செய்யவேண்டும்" என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்