Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

முறையற்ற தூக்கத்தால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி தெரியுமா ?

முறையற்ற தூக்கத்தால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி தெரியுமா ?

2 மார்கழி 2024 திங்கள் 14:49 | பார்வைகள் : 5580


முறையற்ற தூக்கமானது மாரடைப்பு பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்க செய்கிறது. இதனை மருத்துவர்கள் அண்மையில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி & கம்யூனிட்டி (Journal of Epidemiology & Community Health) இதழ் நிர்வாகத்தினர் 40 முதல் 79 வயதுக்கு உள்பட்ட 72,000 பேரிடம் அன்றாட தூக்கமுறை குறித்து கேட்டறிந்தனர். தினமும் 8 மணி நேரம் ஒவ்வொருவரும் தூங்க வேண்டும். ஒருவர்உறங்கும் நேரமும் எழுந்திருக்கும் நேரமும் ஒவ்வொரு நாளும் மாறுபட்டால் அந்த தூக்கம்முறையற்றது என கூறப்படுகிறது. இம்மாதிரியான உறக்கம் உடல்நலனைபாதிக்கும். அதுமட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு போன்றவை ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.

மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றால் ஏற்படும் முறையற்ற தூக்கத்திலிருந்து விடுபட வேண்டும். உடற்பயிற்சி, நடை பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி போன்றவற்றில் ஏதாவது ஒரு பயிற்சியை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.ஆரோக்கியமான உணவு பழக்கம், வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் இரவில் ஏற்படும் தூக்கமின் பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம் எனஆய்வுகள் கூறுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்