சம்பந்தனின் இல்லம் அரசாங்கத்திடம் கையளிப்பு
2 மார்கழி 2024 திங்கள் 10:05 | பார்வைகள் : 4775
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பதற்கு அமைச்சு ஐந்துக்கும் மேற்பட்ட நினைவூட்டல்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள இந்த உத்தியோகபூர்வ இல்லம் சம்பந்தனுக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் போது 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், சம்பந்தனுக்கு இருக்கும் வரையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதன் பராமரிப்பு பணிகள் அனைத்தும் கடந்த காலத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த உத்தியோகபூர்வ இல்லம் டிசெம்பர் 12ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என சம்பந்தனின் மகள் எழுத்து மூலம் அமைச்சுக்கு அறிவித்திருந்த போதிலும் அன்றைய தினம் அது கையளிக்கப்படவில்லை.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan