கண்கலங்க வைத்த 'அமரன்'..!
26 ஐப்பசி 2024 சனி 13:52 | பார்வைகள் : 7685
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சிவகார்த்திகேயன் நேரில் சென்று புரமோஷன் செய்து வருகிறார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்திய திருநாட்டிற்காக வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு கதையை கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதையில் உருவான ‘அமரன்’ திரைப்படம் டெல்லியில் இந்திய ராணுவ வீரர்களுக்காக ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்டது.
இந்த காட்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், இந்நாள் ரா.ணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் ‘அமரன்’ படத்தை பார்த்த நிலையில் சில காட்சிகளில் அவர்கள் கண்கலங்கி இருப்பதையும் பார்க்க முடிகிறது. ராணுவ வீரர்கள் அனைவருக்கும் தனது நன்றி மற்றும் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார்.
இது குறித்த வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் சாய் ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan