பொங்கலுக்கு 'விடாமுயற்சி'யா ?, 'குட் பேட் அக்லி'யா ?... தொடரும் குழப்பம்
26 ஐப்பசி 2024 சனி 13:48 | பார்வைகள் : 6614
தீபாவளிக்கு எந்தப் படங்கள் வரப்போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தீபாவளியை அடுத்து வரும் பண்டிகை நாளான பொங்கலுக்கு என்னென்ன படங்கள் வரப் போகிறது என்பதையும் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு சில படங்களின் பெயர்கள் இப்போதே பேச்சுக்குள் வர ஆரம்பித்துவிட்டன. அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தை 2025ம் ஆண்டின் பொங்கல் வெளியீடு என எப்போதோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். ஆனால், நேற்று வந்த ஒரு அறிவிப்பு இப்போது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. படத்தின் தமிழக, கர்நாடகா, கேரளா உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நேற்று அறிவித்தது. அதற்கான போஸ்டரில் படத்தின் வெளியீடு குறித்து எந்தத் தகவலும் இடம் பெறவில்லை.
இப்படத்திற்கு முன்பாகவே அஜித் நடிக்க ஆரம்பித்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களுக்கு நடத்தினால்தான் மொத்த படப்பிடிப்பும் முடியுமாம். தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் ஸ்பெயின் நாட்டில் உள்ளாராம். அங்கேயே சென்று 'விடாமுயற்சி' படத்தின் எஞ்சிய சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடிக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளார்களாம்.
'குட் பேட் அக்லி'யின் நேற்றைய போஸ்டரில் பொங்கல் வெளியீடு குறித்த எந்தத் தகவலும் இல்லாத காரணத்தால் 'விடாமுயற்சி' படம்தான் பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. எடுக்க வேண்டிய சில காட்சிகளைத் தவிர மற்ற வேலைகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளது என்கிறார்கள். விரைவில் பட வெளியீடு குறித்த அறிவிப்பும் வரலாம் என்பதே இப்போதைய அப்டேட்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan