பிலிப்பைன்சில் டிராமி புயல் - 65 பேர் பலி

26 ஐப்பசி 2024 சனி 10:31 | பார்வைகள் : 8662
பிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட இயற்றை அனர்த்தங்களில் சிக்குண்டு, 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்சின் இசபெலா, இபுகாவோ உள்ளிட்ட பல மாகாணங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையை தொடர்ந்து படங்காஸ் மாகாணத்தில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதுடன் இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், தற்போது அங்கு மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமற் போயுள்ளதால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025