Yvelines : கத்திக்குத்து தாக்குதல்... குளியறையில் கிடந்த சடலம்..!
.jpg)
25 ஐப்பசி 2024 வெள்ளி 17:14 | பார்வைகள் : 11260
Saint-Cyr-l'École (Yvelines) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். நேற்று ஒக்டோபர் 24 வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
rue Ernest-Bizet வீதியில் உள்ள வீடொன்றில் மாலை 7 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். வீட்டின் குளியலறையில் வைத்து 55 வயதுடைய ஒருவர் கத்திக்குத்து இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். அவரது நண்பர் ஒருவரே காவல்துறையினரை அழைத்துள்ளார். கொல்லப்பட்ட நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் அறியமுடியவில்லை எனவும், தொலைபேசி இயங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு, நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அதன் பின்னரே நண்பர் சடலமாக கிடப்பதை பார்த்துவிட்டு காவல்துறையினரை அழைத்துள்ளார்.
உடற்கூறு பரிசோதனைகளுக்காக சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025