கணவர்கள் தங்கள் மனைவியிடம் சொல்லக் கூடாத விஷயங்கள்!!
25 ஐப்பசி 2024 வெள்ளி 15:04 | பார்வைகள் : 8526
கணவன் மனைவி பந்தம் மற்ற உறவுகளை போல கிடையாது. அதில் புரிதல் மிகவும் அவசியம். அவர்களுடைய உறவு உறுதியானது. தன் பிறந்த வீட்டையும், உறவுகளையும் பிரிந்து கணவனை நம்பி வரும் பெண்ணுக்கு, கணவன் தான் எல்லாமே. அதனால் தனது மனைவியின் சுயமரியாதையை பாதிக்கும் வார்த்தைகளை கணவன் பயன்படுத்தக் கூடாது.
கோபம் வந்தாலும் கிண்டலாக கூட கணவன் மனைவியிடம் மரியாதைக் குறைவாக பேசக் கூடாது. கருத்து வேறுபாடு வரும் நேரத்தில் கூட கோபத்தில் உங்கள் உறவை பலவீனப்படுத்தும் வார்த்தைகளை சொல்லக் கூடாது. கணவர் எப்போதும் தன் மனைவி எல்லா உறவுகளையும் விட்டு தன்னோடு வாழ வந்தவள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கணவன் தனது மனைவியின் உடல் அமைப்பை குறித்து தவறாக பேசக் கூடாது. உருவக்கேலி அந்த உறவை சிதைத்து விடும். எந்த பெண்ணுக்கும் இது சங்கடமாக இருக்கும். உடல் எடை, நிறம், உயரம் பற்றிய எந்த நகைச்சுவையும் எந்தப் பெண்ணும் விரும்பமாட்டார். இதை நீங்கள் சொல்லும்போது மனதளவில் உங்களிடமிருந்து விலகிவிடுவார்.
மறந்தும் கூட மனைவியின் குடும்பத்தினர் அல்லது உறவினர்களை எதிர்மறையாக பேச வேண்டாம். கணவர் தன் மனைவியை தன்னுடைய உறவினர்களுடன் ஒப்பிட்டு பேசினால், அவரை கிண்டல் செய்தால் கணவன்-மனைவி பந்தத்தில் வெறுப்பு வரும். 'உன் சித்தப்பா ஒரு ஆளா, உங்க குடும்பமே இப்படிதான்' இந்த மாதிரி பேசுவதை தவிர்க்க வேண்டும். உங்களால் எதையும் பாராட்ட முடியவில்லை என்றாலும் குறை சொல்லாமல் இருக்க வேண்டும்.
உங்களுடைய தாய் பாசமானவராக, பொறுமைசாலியாக இருக்கலாம். உங்களை மன்னித்து கொண்டே இருப்பவராக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு ஆணும் அறிந்தோ அறியாமலோ தன் மனைவியை தாயுடன் ஒப்பிடுவார்கள். திரும்ப திரும்ப ஒப்பிட்டால் அது எரிச்சல், கோபம், மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடும்.
ஒவ்வொரு தடவையும், 'என் அம்மா கையில் சாப்பிடுவது மாதிரி வருமா? என் அம்மா மாதிரி வீட்டை கவனிக்க முடிய்ய்மா? குழந்தைகளை வளர்க்க அவங்கள மாதிரி முடியுமா?'என கணவர் அடிக்கடி சொன்னால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை தான் ஏற்படும். எந்த மனைவிக்கு இது பிடிக்காது. உங்களுடைய தாயின் நடத்தை, ஆளுமை, பழக்கவழக்கங்கள் வேறு மாதிரியானது. மனைவியின் நடத்தை, ஆளுமை, சூழ்நிலைகள் வேறுபட்டவை. மறந்தும் இருவரையும் ஒப்பிட வேண்டாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan