Paristamil Navigation Paristamil advert login

வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு.. தூக்கில் தொங்கிய கணவர்!!

வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு.. தூக்கில் தொங்கிய கணவர்!!

25 ஐப்பசி 2024 வெள்ளி 13:11 | பார்வைகள் : 6049


Émerainville (Seine-et-Marne) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நேற்று ஒக்டோபர் 24, வியாழக்கிழமை இந்த குடும்ப வன்முறை இடம்பெற்றுள்ளது. பிரேஸில் நாட்டு குடியுரிமை கொண்ட 1983 ஆம் ஆண்டு பிறந்த பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். அவரது 17 வயதுடைய மகள் காவல்துறையினரை அழைத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், தற்கொலைக்கு முயன்ற அப்பெண்ணின் கணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கயிற்றில் தூக்கிட்டு தொங்கிய நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து, அது கத்திக்குத்தில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு 17, 14 மற்றும் 9 வயதுடைய மூன்று பிள்ளைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்