Paristamil Navigation Paristamil advert login

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

25 ஐப்பசி 2024 வெள்ளி 08:51 | பார்வைகள் : 5177


மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக  நீதிமன்ற பதிவாளருக்கு நேற்று வியாழக்கிழமை (24) இரவு  வந்த தொலைபேசிஅழைப்பை அடுத்து  அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் கட்டித்தை சுற்றிவர பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் அந்த பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதுடன் நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து இந்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பில் சீயோன் தேவலாய தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட ஸாரான் காசிமின் ஜ.எஸ்.ஜ.எஸ் என சந்தேகிக்கப்படும் பலரது மற்றும் பிரதான  சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில்  இடம்பெற்றுவருகின்றதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

வர்த்தக‌ விளம்பரங்கள்