சொந்த வங்கியில் கொள்ளை - கமல் என்பவருக்கு ஆறு வருட சிறை!
25 ஐப்பசி 2024 வெள்ளி 07:28 | பார்வைகள் : 7603
வங்கி ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்துவந்த கமல் என்பவருக்கு, ஆறுவருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சோம்ப்ஸ் எலிசேக்கு அருகில் உள்ள வங்கி ஒன்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. 65 பாதுகாப்பு பெட்டகங்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தினைக் கொள்ளையிட்டுக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.
பின்னர் விசாரணைகளில் கொள்ளயர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். Alexandre A. மற்றும் Hicham E. ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், அவர்களுக்கு மூளையாகச் செயற்பட்டது ஜெ. கமல் எனும் வங்கியின் முகாமையாளாராவார்.
அவருக்கு 6 வருட சிறையும், 100,000 யூரோக்கள் குற்றப்பணமும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கு ஆறு வருட சிறையும், 50,000 யூரோக்கள் குற்றப்பணமும் விதிக்கப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan