லீனா : இன்று இறுதிச் சடங்கு!!
                    25 ஐப்பசி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 5989
கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்த லீனா எனும் சிறுமியின் இறுதிச் சடங்கு இன்று ஒக்டோபர் 25, வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது.
லீனாவின் வசித்த Plaine (Bas-Rhin) நகரில் உள்ள Saint-Arnould தேவாலயத்தில் இந்த இறுதிச் சடங்கு பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் லீனா காணாமல் போயிருந்த நிலையில், ஒரு வருடமும், இரண்டு மாதங்களின் பின்னர் 2024 ஒக்டோபர், 15 ஆம் திகதி அவரது சடலம் 400 கி.மீ தொலைவில் Nièvre நகரில் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டது.
இந்நிலையில், பத்து நாட்களின் பின்னர் அவரது இறுதிச் சடங்கு இடம்பெற உள்ளது. நெருங்கிய உறவினர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட 300 பேர் தேவாலயத்துக்கு உள்ளேயும், ஏனைய பொதுமக்கள் வெளியேயும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுக்காக 20 ஜொந்தாமினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட உள்ளனர்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan