2026-ல் எந்த கட்சி வென்றாலும் கூட்டணி ஆட்சிதான் அமையும் - தமிழிசை சவுந்தரராஜன்
24 ஐப்பசி 2024 வியாழன் 12:14 | பார்வைகள் : 5134
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் அமையும் என தெலுங்கானா முன்னாள் கவர்னரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி என்பது அரசியலை தாண்டி நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். அரசியல் எப்படி இருந்தாலும், பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல. விவாதங்கள்தான் இருக்கிறது, விரிசல்கள் இல்லை என்று முதல்-அமைச்சர் சொல்கிறார். ஆனால் விரிசல்களை ஏற்படுத்தும் அளவிற்கு விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது.
அரசாங்கத்தை பொறுத்தவரை எதுவுமே சரியாக நடப்பதாக எனக்கு தோன்றவில்லை. 2026 சட்டமன்ற தேர்தல் தி.மு.க. நினைக்கும் அளவிற்கு அவர்களுக்கு சுலபமாக இருக்காது. தமிழகத்தில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் அமையும்."
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan