Aulnay-sous-Bois : குழந்தை கடத்தல்.. விசாரணைகளில் பல்வேறு திருப்பங்கள்!

24 ஐப்பசி 2024 வியாழன் 05:54 | பார்வைகள் : 8133
Aulnay-sous-Bois நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து 18 மாதங்கள் வயதுடைய குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் அறிந்ததே. விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், பல்வேறு அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
குழந்தையைக் கடத்தியதாக சந்தேகிகப்படும் குழந்தையின் பெற்றோர்கள், பெல்ஜியத்துக்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குழந்தையும் பெற்றோர்களும் கைது செய்யப்படவில்லை. அவர்களை மகிழுந்து மூலம் பெல்ஜியத்துக்கு அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
பெல்ஜியத்தின் Mons நகரில் உள்ள தங்குமிடம் ஒன்றில் அவர்களது மகிழுந்து கமராவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு தங்குமிடம் சோதனையிடப்பட்டது. குறித்த தங்குமிடத்தில் உள்ள ஒரு அறையில் அவர்கள் தங்கியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து குழந்தை பயன்படுத்திய டயப்பர் கண்டுபிடிக்கப்பட்டது.
குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் குற்றவாளிகளை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1