Aubervilliers : நடுவீதியில் துப்பாக்கிச்சூடு.. இருவர் காயம்!!

23 ஐப்பசி 2024 புதன் 17:47 | பார்வைகள் : 11189
Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் நடுவீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். ஆயுதாரிகள் தப்பி ஓடியுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி அளவில் இச்சம்பவம் rue Hélène Cochennec வீதியில் இடம்பெற்றுள்ளது. வீதியில் காத்திருந்த இருவரை நோக்கி வருகை தந்த ஆயுததாரிகள் இருவர், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டின் பின்னணி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025