மூன்று முறை முறிவான மணவாழ்க்கை..தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பிரபல பாப் பாடகி

23 ஐப்பசி 2024 புதன் 09:08 | பார்வைகள் : 2780
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார்.
அமெரிக்காவின் Mississippi நகரில் பிறந்தவர் பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). பிரபல பாப் பாடகியான இவர், தனது பாடல்களுக்காக மொத்தம் 429 விருதுகளை வென்றுள்ளார்.
2004ஆம் ஆண்டில் தனது நண்பர் ஜேசன் அலெக்ஸாண்டரை திருமணம் செய்துகொண்ட பிரிட்னி ஸ்பியர்ஸ், இரண்டே நாட்களில் அந்த திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
அதன் பின்னர் 2004யில் கெவின் பெடெர்லின் என்பவரை மணந்த பிரிட்னி ஸ்பியர்ஸ், அவரை மூன்று ஆண்டுகளில் பிரிந்தார்.
கடந்த 2022யில் சாம் அஸ்காரியை திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமணமும் விவகாரத்தில் முடிந்தது.
இந்நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை தானே திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் "இது என்னை நானே திருமணம் செய்து கொண்ட நாள். என் வாழ்வில் நான் செய்த மிகச் சிறந்த காரியம் இது. அதை மீண்டும் கொண்டு வருவது சங்கடமாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ தோன்றலாம். ஆனால் இது நான் செய்த மிகச் சிறந்த காரியம்" என பதிவிட்டுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3