சீன உயிரியல் பூங்காவில் பாக்டீரியா தொற்று

23 ஐப்பசி 2024 புதன் 08:37 | பார்வைகள் : 6545
சீனாவில் ஹொங்கொங்கில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பக்டீரியா (Bacteria) தொற்று காரணமாக 11 குரங்குகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி உயிரிழந்த குரங்குகளின் உறுப்புகளில் மெலியோடோசிஸ் என்ற பக்டீரியா இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பக்டீரியா விலங்குகள் மற்றும் மனிதர்களைப் பாதிக்கும் என்பதுடன், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்குகள் உயிரிழந்ததால் ஹொங்கொங் உயிரியல் பூங்காவிலுள்ள குரங்குகள் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025