வரவுசெலவுத்திட்டம் 2025 : 'சோம்பேறித்தனமான அறிவிப்புகள்' என விமர்சனம்!

22 ஐப்பசி 2024 செவ்வாய் 18:01 | பார்வைகள் : 12135
அரசாங்கம் முன்மொழிந்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை முதல் ஆராய்ந்து வருகிறது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அரசாங்கம், இந்த திட்டத்தினால் பெரும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
இந்த வரவுசெலவுத்திட்டமானது 2025 ஆம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறையை 5% சதவீதத்தால் குறைக்கும் என பொருளாதார அமைச்சர் Antoine Armand தெரிவித்தார். அதேவேளை, அரசாங்கம் எந்த முயற்சியும் போடாமல், சோம்பேறித்தனமாக இந்த வரவுசெலவுத்திட்டத்தை வகுத்துள்ளதாக குற்றமும் சாட்டப்பட்டுள்ளது.
“கொடுப்பனவுகளைக் குறைப்பது. வரியை அதிகரிப்பது போன்ற எந்த முயற்சிகளும் இல்லாத மேலோட்டமான நடவடிக்கையினையே அரசு முன்மொழிந்துள்ளது. இந்த வரவுசெலவுத்திட்டத்தினால் நாளை எந்த பிரச்சனையும் தீராது!” என Rassemblement national கட்சித்தலைவர் மரீன் லு பென் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025