ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து - உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கும் பிரான்ஸ்!
20 ஐப்பசி 2024 ஞாயிறு 06:20 | பார்வைகள் : 8629
உக்ரேனுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை பிரான்ஸ் வழங்க உள்ளது. இவை பரிசில் உள்ள ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கி, அதில் இருந்து பெறப்பட்ட தொகையில் இருந்து வழங்கப்பட உள்ளது.
பிரான்சில் உள்ள ரஷ்யாவின் சொத்துக்களில் 300 மில்லியன் யூரோக்கள் முடக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த பணத்தில் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளதாக பிரெஞ்சு இராணுவ அமைச்சர் Sébastien Lecornu அறிவித்தார்.
12 புதிய சீசர் பீரங்கிகள், 155 மி.மீ ஷெல், அஸ்டர் ஏவுகணைகள், குண்டுகள், மிஸ்ட்ரல் ஏவுகணைகள் போன்றன வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, 60 சீசர் பீரங்கிகளை பிரான்ஸ் உக்ரேனுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan