Bobigny : பயணிகளை அச்சுறுத்திய ஒருவர் கைது!!
19 ஐப்பசி 2024 சனி 17:25 | பார்வைகள் : 11549
கத்தி ஒன்றினை வைத்துக்கொண்டு அச்சுறுத்தல் விடுத்த ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
தமிழர்கள் செறிந்துவாழும் Bobigny (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய ஒருவர், கைகளில் 18 செ.மீ நீளமுடைய கத்தி ஒன்றினை வைத்துக்கொண்டு Pablo-Picasso பேருந்து தரிப்பிடத்தில் இருந்தவர்களை அச்சுறுத்திக்கொண்டிருந்துள்ளார். 'உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன்!' என அவர் கத்தி மிரட்டியுள்ளார்.
உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
அச்சுறுத்தல் விடுத்தவரை சரணடையும் படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார். அதை அடுத்து அவர் காவல்துறையினரால் மடக்கிப்பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மாலை 4.15 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் நாட்டை விட்டு வெளியேற பணிக்கப்பட்ட (OQTF) ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan