Paristamil Navigation Paristamil advert login

இந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவரா?

இந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவரா?

19 ஐப்பசி 2024 சனி 14:48 | பார்வைகள் : 4708


கடந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்களின் வாக்குகள் அடிப்படையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறினார். இவரை தொடர்ந்து இந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சற்று முன் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது.

இந்த வாரம் நாமினேஷனில், விஜே விஷால், தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ரஞ்சித், கானா ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்னவ், சாச்சனா என மொத்தம் பத்து போட்டியாளர்கள் சிக்கி இருந்தனர். இவர்களில் விஜே விஷால் மற்றும் சௌந்தர்யா அதிக வாக்குகளை பெற்று லீடிங்கில் இருப்பதாகவும், இவர்களுக்கு அடுத்தபடியாக முத்துக்குமரன், ரஞ்சித், தீபக், ஜாக்குலின், சாச்சனா ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் குறைவான வாக்குகளை பெற்று தர்ஷா குப்தா மற்றும் அர்னவ் ஆகியோர் கடைசி இடத்தில் இருப்பதால் இவர்களில் ஒருவர்தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட வாய்ப்பு அதிகம் என ஏற்கனவே கூறப்பட்டது.

எலிமினேட் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடித்து கொண்டிருக்கிறாரா? பல விஷயங்களில் ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய அர்னவ் தான் வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது. இவர் இவ்வளவு சீக்கிரம் வெளியேறுவார் என்பது ரசிகர்கள் எதிர்பாராதது என்றே கூறலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்