கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு! - தீவிர விசாரணை!!
14 ஐப்பசி 2024 திங்கள் 20:00 | பார்வைகள் : 7528
Grigny (Essonne) நகரில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
ஒக்டோபர் 12, சனிக்கிழமை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை ஒன்றின் கைவிடப்பட்ட ஒரு கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.
ஆண் ஒருவரது சடலம் அங்கு சிதைவடைந்த நிலையில் கிடந்துள்ளது. அவர் கொல்லப்பட்டு அங்கு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் மரணமடைந்து மூன்று நாட்களுக்கும் அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan