மருத்துவக்காப்புறுதியில் €7 மில்லியன் யூரோக்கள் மோசடி!!

14 ஐப்பசி 2024 திங்கள் 08:00 | பார்வைகள் : 14834
இவ்வருடத்தில் மருத்துவக்காப்புறுதியில் (Caisse primaire d’Assurance maladie) €7 மில்லியன் யூரோக்கள் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் €6 மில்லியனாக இருந்த இந்த மோசடி, இவ்வருடத்தில் முதல் 9 மாதங்களிலேயே €7 மில்லியனை தாண்டியுள்ளது.
போலி காப்புறுதி அட்டைகள் பயன்படுத்தப்படுவதாகவும், மருத்துவ நிலையங்களில் பணிபுரிபவர்கள் போலியான மருத்துவச்சீட்டுக்களை பயன்படுத்தி காப்புறுதி நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒக்டோபர் 11, வெள்ளிக்கிழமை 74 வயதுடைய ஒருவர் இதுபோன்ற மோசடி ஒன்றில் ஈடுபட்டதற்காக 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த மோசடிகளைக் கட்டுப்படுத்த 24 பேர் கொண்ட சிறப்பு குழுவு நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025