சட்டவிரோத குடிவரவாளர்கள் மீது பாய்கிறது புதிய சட்டம்!

13 ஐப்பசி 2024 ஞாயிறு 14:14 | பார்வைகள் : 10792
பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது புதிய சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது முதற்கட்ட அறிவிப்பை அரச ஊடக பேச்சாளர் Maud Bregeon வெளியிட்டுள்ளார்.
”குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விதிகளை மாற்றியமைக்க புதிய குடியேற்றச் சட்டம் தேவைப்படும்!” என அவர் இன்று ஒக்டோபர் 13, ஞாயிற்றுக்கிழமை காலை ஊடகங்களிடம் தெரிவித்தார். சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் அகதிகளை நிர்வாக தடுப்பு மையங்களில் ( centres de rétention administrative) தடுத்து வைக்கும் காலம் 90 நாட்களில் இருந்து 210 நாட்களாக அதிகரிக்கும் திட்டம் தொடர்பிலேயே ஆராயப்பட்டு வருகிறது.
இது தொடர்பிலான சட்டத்திருத்தத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் நடவடிக்கைகள் வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025