பரிஸ் : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி.. மேலும் ஒருவர் காயம்..!

13 ஐப்பசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 5816
பரிசில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Le Beach மதுபான விடுதிக்கு முன்பாக இத்துப்பாக்கிச்சூடு, நேற்று ஒக்டோபர் 12, சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 23 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். 24 வயதுடைய மற்றுமொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காலிலும், அடிவயிற்றிலும் துப்பாக்கி சன்னம் பாய்ந்து படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
30 வயதுடைய சந்தேகநபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டின் நோக்கம் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025