Bagneux : கட்டிடத்தில் பரவிய தீ.. 13 பேருக்கு மூச்சுத்திணறல்..!!

12 ஐப்பசி 2024 சனி 13:33 | பார்வைகள் : 8493
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் Hauts-de-Seine மாவட்டத்தின் Bagneux நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியது. இதில் 13 பேர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர்.
rue Claude Debussy வீதியில் உள்ள 13 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்றிலேயே தீ பரவியது. கரும்புகை கட்டிடம் முழுவதும் பரவியதை அடுத்து பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர். ஆறு சிறுவர்களும், ஒரு கர்ப்பிணி பெண்ணும் என மொத்தம் 13 பேர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பிற்பகல் 3 மணிக்கு தீ பரவல் ஆரம்பித்தது. மாலை 5 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 100 தீயணைப்பு படையினர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025