சுனாமி, பூகம்பத்தை குறிக்கும் Oarfish...! மீண்டும் கரை ஒதுங்கியதாக தகவல்
17 கார்த்திகை 2024 ஞாயிறு 08:56 | பார்வைகள் : 6240
அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் அழிவு நாள் மீன் என்று அழைக்கப்படும் மீண்டும் கரை ஒதுங்கியது.
Oarfish அழிவின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறது.
இந்த மீன் கரை ஒதுங்கிய பின் சுனாமி அல்லது பூகம்பம் ஏற்படுவதனால்தான்.
ஜப்பானிய புராணத்தின்படி, வரவிருக்கும் பேரழிவை இந்த மீன் குறிக்கும் சின்னமாக இருக்கிறதாம்.
2011யில் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு, இந்த மீன் கடற்கரையில் 20க்கும் மேல் தோன்றிய பிறகு, ஜப்பானிய கோட்பாடு பிரபலமடைந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் Oarfish கரை ஒதுங்கியுள்ளது.
தோராயமாக 9 முதல் 10 அடி நீளம் கொண்ட இந்த குளிர்ச்சியான உயிரினம், ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக கரை ஒதுங்கியுள்ளது.
வெள்ளி நிற மற்றும் அகலமான கண்கள் கொண்ட இந்த உயிரினம், மிகவும் குறைவான வெளிச்சம் உள்ள மெசோபெலாஜிக் மண்டலத்தில் ஆழமாக வாழ்கின்றன.
சில புராணக்கதைகள் இந்த மீன் இயற்கை பேரழிவுகள் அல்லது எதிர்கால பூகம்பங்களை முன்னறிவிக்கும் என்று நம்புகின்றன. The Scripps Institution கூற்றுப்படி, 1901 முதல் கலிபோர்னியா கட்டுரையில் 21 Oarfish-கள் மட்டுமே தென்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர் Ben Frable கூறும்போது, "ஏன் இந்த மீன்கள் செத்து மிதக்கின்றன என்று தனக்கும், மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கும் சரியாக தெரியவில்லை" என வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், "அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்ய இது ஒரு நம்ப முடியாத வாய்ப்பு. கடலின் நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு காரணமாக இருக்கலாம். எனினும், அது எல் நினோவில் இருந்து லா நினாவுக்கு மாற்றத்துடன் இணைக்கப்படலாம்" என்று விவரிக்கிறார்.
கடந்த முறை, சான் டியாகோ நகரின் லா ஜொல்லா கோவ்வில் 12 அடி நீளம் கொண்ட Oarfish தென்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan