Nanterre : தண்டவாளத்தில் விழுந்த இளைஞன்.. RATP முகவர் கைது!!
17 கார்த்திகை 2024 ஞாயிறு 05:58 | பார்வைகள் : 7461
19 வயதுடைய இளைஞன் ஒருவன் தண்டவாளத்தில் விழுந்து RER A தொடருந்து மோதி காயமடைந்ததாக செய்தி வெளியிட்டிருந்தோம். Nanterre (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், RATP பாதுகாப்பு முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
RATP பாதுகாப்பு முகவர்கள் நடைமேடையில் 'நடவடிக்கை' ஒன்றில் ஈடுபட்டிருந்த போது, தண்டவாளத்துக்கு அருகே நின்றிருந்த குறித்த இளைஞன் தள்ளப்பட்டுள்ளார். அவர் தண்டவாளத்தில் தவறி விழ, RER A தொடருந்து மோதி காயமடைந்துள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு போராடி வருகிறார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், RATP பாதுகாப்பு முகவர் ஒருவரைக் நேற்று நவம்பர் 16, சனிக்கிழமை கைது செய்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan