RER A தண்டவாளத்தில் தவறி விழுந்து ஒருவர் படுகாயம்..!!

15 கார்த்திகை 2024 வெள்ளி 17:23 | பார்வைகள் : 6327
நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று நவம்பர் 14, வியாழக்கிழமை Nanterre-Université தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், அவரை ஒருவர் வேண்டுமென்றே தள்ளி விழுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட நபர் மீது RER A தொடருந்து மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட RATP ஊழியர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025