ஆந்திரா முதல்வர் குறித்து அவதுாறு 39 பேர் கைது

15 கார்த்திகை 2024 வெள்ளி 03:03 | பார்வைகள் : 3868
ஹைதராபாத், ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பிய 39 பேரை, அம்மாநில போலீசார் கைது செய்துஉள்ளனர்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்துகள் அதிகளவில் வெளியாகி வருகின்றன.
துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அவரது மகள்கள் குறித்தும், மாநில காங்., தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா குறித்தும் இதில் விமர்சனங்கள் இடம்பெற்றதை அடுத்து, அது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, முதல்வர் உள்ளிட்டோர் தொடர்பாக அவதுாறு கருத்துகளை வெளியிட்ட சமூக வலைதளங்களுக்கு விளக்கம் கேட்டு, இதுவரை 67 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. மொத்தம், 100 வழக்குகள் பதிவு செய்துள்ள போலீசார், 39 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், “தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிகளை தெலுங்கு தேசம் கட்சி இதுவரை நிறைவேற்றவில்லை.
''மக்களை ஏமாற்றிய இந்த அரசு மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? இது குறித்து கேள்வி எழுப்பினால் கைது செய்வோம் என மிரட்டுகின்றனர்.
“சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டதற்காக எங்கள் கட்சிக்கு இதுவரை, 650 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதரவாளர்கள் மீது, 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி ஆதரவாளர்கள், 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்றார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025