Paristamil Navigation Paristamil advert login

நாடாளுமன்றத் தேர்தல் 2024 - வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு 

நாடாளுமன்றத் தேர்தல் 2024 - வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு 

14 கார்த்திகை 2024 வியாழன் 11:20 | பார்வைகள் : 4338


இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல்  பி.ப  4 மணிவரை நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் அமைதியான வாக்குப் பதிவுகள் நடைபெற்ற நிலையில், சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை,  நாடளாவிய ரீதியில் 60 வீதம் முதல் 65 வீதமான வாக்குப் பதிவுகள்  இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்