மழலையர் பாடசாலைக்குள் நுழைந்த காட்டுப்பன்றியால் பரபரப்பு!

10 கார்த்திகை 2024 ஞாயிறு 16:24 | பார்வைகள் : 5280
மழலையர் பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த காட்டுப்பன்றியினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
நவம்பர் 7, வியாழக்கிழமை இச்சம்பவம் Marseille மாவட்டத்தின் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Loup நகரசபை மழலையர் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. காலை 8.30 மணி அளவில் வகுப்புகள் முழு வீச்சில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென பாடசாலை வளாகத்துக்குள் காட்டுப் பன்றி ஒன்று நுழைந்துள்ளது.
இதனால் பாடசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பாடசாலை கட்டிடத்துக்குள் வைத்து தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு பன்றி பிடிக்கப்பட்டது.