செங்கடல் மீது மீண்டும் விமான சேவைகளை ஆரம்பித்த எயார் பிரான்ஸ்!

7 கார்த்திகை 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 7379
செங்கடல் மீது பறப்பதை நிறுத்தியிருந்த எயார் பிரான்ஸ் நிறுவனம், நேற்று புதன்கிழமை மாலை முதல் மீண்டும் அதனை ஆரம்பித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை காரணமாக செங்கடல் மீது பறக்காமல், ஆபிரிக்க நாடுகளுக்கு மேலாக வழக்கத்தை விட உயரமாக பறந்திருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த புதிய வழியை எயார் பிரான்ஸ் நிறுவனம் பயன்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மூன்று நாட்களின் பின்னர் மீண்டும் செங்கடல் மீது பறக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் பரிசில் இருந்து கென்யா தலைநகர் நைரோபிக்குச் சென்ற AF814 விமானம் திரும்ப முடியாமல் இருந்த நிலையில், அது மீண்டும் பரிசுக்கு வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025