zone à trafic limité : மேம்படுத்திய கூகுள்.. திணறும் ஆப்பிள்..!

6 கார்த்திகை 2024 புதன் 07:56 | பார்வைகள் : 6082
பரிசின் இதயப்பகுதி என சொல்லப்படும் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் மற்றும் 4 ஆம் வட்டாரத்தில் புதிய போக்குவரத்து கட்டுப்பாடு (zone à trafic limité) கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்த புதிய விதிமுறையை கூகுள் நிறுவனம் அவர்களது Map செயலில் இணைத்துள்ளனர். அதேபோல் மற்றுமொரு நிறுவனமான Waze செயலியும் இதனை தரவேற்றி மேம்படுத்தியுள்ளது..
ஆனால் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தங்களது Map செயலியில் இதனை இதுவரை இணைக்கவில்லை எனவும், ஆப்பிள் பயனாளர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும் படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளுக்காக போக்குவரத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்த போது அதனை மேம்படுத்தவும் கூகுள் நிறுவனம் தாமதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.