பாதிவழியில் பிரிந்த உயிர்... கடலில் மிதந்த இரு சடலங்கள்!
 
                    6 கார்த்திகை 2024 புதன் 07:00 | பார்வைகள் : 7553
கலே கடற்பகுதியில் இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கிச் செல்லும் முயற்சியில் இடை நடுவில் கடலில் மூழ்கி அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கும் ferry கப்பல் ஒன்று இந்த சடலங்கள் மிதப்பதைப் பார்த்துவிட்டு கடற்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளது. அதை அடுத்து பிரெஞ்சு கடற்படையினர் குறித்த இரு சடலங்களையும் மீட்டனர். கடந்த சில நாட்களாக தண்ணீரில் மூழ்கி உடல் வீங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 5 ஆம் திகதி இச்சடலங்கள் மீட்கப்பட்டதாக Boulogne-sur-Mer வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உடற்கூறு விசாரணைகளுக்காக சடலங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan