Val-d'Oise : தாக்குதல் சம்பவம் ஒன்றில் இருவர் காயம்! - நால்வர் கைது!

5 கார்த்திகை 2024 செவ்வாய் 14:03 | பார்வைகள் : 5569
Saint-Brice-sous-Forêt (Val-d'Oise) நகரில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குழு மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு 9.45 மணி அளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 மற்றும் 28 வயதுடைய இருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். சுத்தியல் மற்றும் கத்தி போன்றவற்றை பயன்படுத்தி கும்பல் ஒன்று அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டது. காவல்துறையினர் அழைக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தடைந்த போது, இருவரும் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருவர் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Georges-Pompidou European மருத்துவமனையிலும், ஒருவர் Clichy (Hauts-de-Seine) நகரில் உள்ள Beaujon மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025